''பராசக்தி'' பட அப்டேட்...முரளி ஏ.ஐ ? - மனம் திறந்த அதர்வா

இன்னும் 2 மாதங்களில் பராசக்தி படப்பிடிப்பு முடிந்துவிடும் என அதர்வா கூறினார்.
சென்னை,
விஜயகாந்தைபோல முரளியையும் ஏ.ஐ மூலம் படங்களில் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு அதர்வா பதிலளித்தார்.
அதர்வா நடிப்பில் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ''டி.என்.ஏ''. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மதுரை வந்த அதர்வா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ''பராசக்தி'' பட அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில், ''இன்னும் 2 மாதங்களில் பராசக்தி படப்பிடிப்பு முடிந்துவிடும்'' என்றார்
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் விஜயகாந்தைபோல முரளியையும் ஏ.ஐ மூலம் படங்களில் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அதர்வா மனம் திறந்து பதிலளிக்கையில்,
''அதற்கு ஸ்கிரிப்ட்தான் வேண்டும். இப்போதைக்கு அந்த மாதிரி எந்த திட்டமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வருமா?, வராதா? என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை'' என்றார்.






