'பராசக்தி' செகண்ட் சிங்கிள்: என்னுடைய கெரியரில் இது சிறந்த பாடலாக இருக்கும்- ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் இசையத்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில், பராசக்தி படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும், என்னுடைய சினிமா கெரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக பராசக்தி படத்தின் செகண்ட் சிங்கிள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.






