சிதம்பரத்தில் நடைபெறும் 'பராசக்தி' படப்பிடிப்பு பணி


சிதம்பரத்தில் நடைபெறும் பராசக்தி படப்பிடிப்பு பணி
x
தினத்தந்தி 6 Feb 2025 8:04 AM IST (Updated: 24 Feb 2025 3:20 PM IST)
t-max-icont-min-icon

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிதம்பரம்,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்படத்தின் பணிகள் 5 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

1 More update

Next Story