'பராசக்தி' படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போல பிரமாண்டமாக இருக்கும் -தயாரிப்பாளர் பாஸ்கரன்

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
'பராசக்தி' படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போல பிரமாண்டமாக இருக்கும் -தயாரிப்பாளர் பாஸ்கரன்
Published on

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்துவந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்றை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பகிர்ந்துள்ளார். அதாவது, "பராசக்தி படம் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை போன்ற காலகட்ட படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கான கதையை, முதலில் நடந்த லைவ் லொகேஷன்களில் படமாக்கி வருகிறோம். இப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே தலைப்பை முடிவு செய்து விட்டோம். பாசில் ஜோசப் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com