‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா - ரஜினி, கமல் பங்கேற்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
ஒரு நேர்கானலில் அவர் பேசுகையில், 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜன.3ம் தேதி நடத்தவுள்ளோம். ரஜினி, கமல் விழாவில் பங்கேற்பதாக வரும் தகவல்கள் வதந்திதான். யார் கிளப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை’ என்றார்.
Related Tags :
Next Story






