‘பராசக்தி’: சிவகார்த்திகேயன் முதல் ஸ்ரீலீலா வரை.. யாருக்கு எவ்வளவு சம்பளம்?

பராசக்தி படத்திற்காக நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘பராசக்தி’: சிவகார்த்திகேயன் முதல் ஸ்ரீலீலா வரை.. யாருக்கு எவ்வளவு சம்பளம்?
Published on

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பராசக்தி படத்திற்காக நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இப்படத்தில் மொத்த பட்ஜெட் சுமார் ரூ.141 கோடி என்றும் அதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.30 கோடி சம்பளமும், ரவி மோகனுக்கு ரூ.16 கோடியும், சுதா கொங்கராவுக்கு ரூ.15 கோடியும், அதர்வாவுக்கு ரூ.2 கோடியும், நடிகை ஸ்ரீலீலாவிற்கு ரூ.1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com