ஓடிடியில் குறைந்த நேரத்தில் 100 மில்லியன் நிமிடங்களை எட்டி சாதனை படைத்த "பராசக்தி"

திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஓடிடியிலும் பராசக்தி படம் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஓடிடியில் குறைந்த நேரத்தில் 100 மில்லியன் நிமிடங்களை எட்டி சாதனை படைத்த "பராசக்தி"
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பற்றி பேசும் படமாக உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஜீ5 ஓடிடியில் கடந்த 7ந் தேதி வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகி குறைந்த நேரத்தில் 100 மில்லியன் நிமிடங்களை எட்டி புதிய சாதனையை பராசக்தி படம் படைத்துள்ளதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com