காயம் விரைவில் குணமாக சிறுநீரை குடித்த 'சூரரைப்போற்று' நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல். இவர் பாலிவுட் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சூரரைப்போற்று' படத்தில் நடித்திருந்தார்
இந்நிலையில், முழங்கால் காயத்தை குணப்படுத்த தனது சிறுநீரை குடித்ததாக பரேஷ் ராவல் சமீபத்திய நேர்காணலில் பேசியது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
அவர் கூறியதாவது, 'ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய "கடக்" படத்தின் படப்பிடிப்பின்போது எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் எனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணினேன். அப்போது என்னை மருத்துவமனையில் வந்து பார்த்த அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன், சிறுநீரை குடிக்க சொன்னார். அவரின் பேச்சை கேட்டு நானும் என்னுடைய சிறுநீரை குடித்தேன். அது என்னை விரைவாக குணமடைய உதவியது' என்று பரேஷ் ராவல் கூறினார். இவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.






