"இட்லி கடை" படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த பார்த்திபன்

தனுஷ், நித்யா மேனன் நடித்துள்ள 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
"இட்லி கடை" படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த பார்த்திபன்
Published on

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் "இட்லி கடை" படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துவிட்டதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த சூதாடி இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக இட்லி கடையில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.

இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே) அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் சாரி (sorry) வந்து விடும்!" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com