

சென்னை,
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் குந்தவையை கொஞ்ச நாள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது என திரிஷா குறித்து மறைமுகமாக கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்க்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது படத்தை போட சொல்லி அந்த கருத்தை கூறினார் என எனக்கு தகவல் கிடைக்கிறது என்றார்.
இந்தநிலையில் பார்த்திபன் நேற்று வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில், திரிஷாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் முழு வீடியோவும்,விளக்கமும் விரைவில் வரும் என கூறியுள்ளார்.