இந்தியன் 2 படத்துடன் மோதும் 'டீன்ஸ்'

நடிகர் பார்த்திபன் இயக்கிய படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Parthiban’s Teenz set to clash with Indian 2 on July 12 release
Published on

சென்னை,

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'டீன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இவர் தயாரித்து, இயக்கிய 'ஒத்த செருப்பு' படம் பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய 'இரவின் நிழல்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில், தற்போது இவர் எடுத்த டீன்ஸ் படம் வரும் 12-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆனால் வரும் 12-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com