‘பருத்திவீரன்’ பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் பாடகி லட்சுமி அம்மாள் (வயது 75). இவர், தென் மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிராமிய பாடல்களை பாடி வந்தார்.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’ ஆகிய பாடல்களை பாடி பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






