காதலியை கரம் பிடித்த 'பசங்க' பட நடிகர்

'பசங்க' பட நடிகர் ஸ்ரீராம் தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியா என்பவரை மணமுடித்துள்ளார்.
காதலியை கரம் பிடித்த 'பசங்க' பட நடிகர்
Published on

சென்னை,

கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். அதனை தொடர்ந்து 2009-ம் ஆண்டு வெளியான 'பசங்க' படத்தில் நடித்து பிரபலமானவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது.

இவர் தற்போது ஒரு பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீராம் தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியா என்பவரை மணமுடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த திருமண தம்பதியினருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com