அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு

துணை நடிகையும், பிரபல சின்னத்திரை நடிகையுமான ஷர்மிளா தாப்பா நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
Published on

சென்னை,

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம் வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஷர்மிளா தாபா. மேலும் இவர் சின்னத்திரையில் நடித்து வந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்த இவர் நடன உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் இவர் மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இவர் இந்தியா பாஸ்போர்ட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் அவரது அண்ணாநகர் முகவரியை கொடுத்துள்ளார். தற்பொழுது மீண்டும் பாஸ்போர்ட் புதுபிக்கும் போது வியாசார்பாடியில் உள்ள முகவரியை கொடுத்ததால் இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் மோசடி வழக்கை இவர் மீது அளித்துள்ளனர். அதனை விசாரித்த காவல் அதிகாரி நடிகை தாபா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com