காஷ்மீரில் பதான் படம்; 4 நாட்களாக அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பதான் படம் வெளியானதில் இருந்து 4 நாட்களாக அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக உள்ளன.
காஷ்மீரில் பதான் படம்; 4 நாட்களாக அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல்
Published on

ஜம்மு,

நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் நடித்துள்ள படம் பதான். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியானது. இதுவரை பதான் படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளது.

கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதலால் சீர்குலைந்த காஷ்மீரிலும் படம் வெளியிடப்பட்டு உள்ளது. காஷ்மீரில் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில், கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியிடப்பட்டது.

இதுபற்றி ரசிகர் ஒருவர் கூறும்போது, 32 ஆண்டுகளுக்கு பின்பு காஷ்மீரில் திரைப்படம் திரையிடப்படுகிறது. பொழுதுபோக்கு விசயத்திற்கு ஏற்றது இது.

கடந்த 4 நாட்களாக பதான் படம் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி கொண்டிருக்கின்றன என கூறியுள்ளார்.

இதுபற்றி ஸ்ரீநகரில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸ் திரையரங்க உரிமையாளரான விகாஸ் தார் கூறும்போது, மக்களிடம் இருந்து இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

காஷ்மீரில் சினிமா கலாசாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. அது ஒரு நல்ல விசயம். அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக உள்ளன. அடுத்த வாரமும் கூட ஷோக்கள் ஹவுஸ்புல்லாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com