ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்து பவன் கல்யாணை வம்புக்கு இழுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா

அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலில் நிற்க வேண்டும் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்து பவன் கல்யாணை வம்புக்கு இழுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா.#RGV #Rajinikanth
ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்து பவன் கல்யாணை வம்புக்கு இழுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா
Published on

மும்பை

சர்ச்சை இயக்குனர் என அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா மீண்டும் டுவிட்டருக்கு வந்திருக்கிறார்.

அவர் படங்களை தாண்டி அவர் போடும் ஒவ்வொரு டுவீட்டும் சர்ச்சையாகும். அவரது டுவீட்டால் இதுவரை பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சினிமாக்காரர்களின் பல விஷயங்களை எதிர்க்கும் ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு தனது ஆதரவை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் பரபரப்பான இயக்குனராக இருந்த ராம்கோபால் வர்மா இப்போது கொஞ்சம் அமைதி காக்கிறார். அவ்வப்போது தமிழ்நாட்டு அரசியல் பக்கமும், திரையுலகப் பக்கமும் திரும்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவார்.

ராம் கோபால் வர்மா ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு "இதுபோல் ஒரு வரவேற்பை பார்த்ததில்லை. என்னுடைய கணிப்புப்படி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டளிப்பார்கள். கண்டிப்பாக இது மற்ற கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தைப் போலவே பவன் கல்யாணும் ஆந்திராவில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலில் நிற்க வேண்டும். அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல ஒரு தைரியம் பவனுக்கு இல்லை என அவரது ரசிகர்கள் நினைத்து விடுவார்கள். அந்த சூப்பர் ஸ்டார் போல நம் சூப்பர் ஸ்டாருக்குத் தைரியமில்லை என்பது தெலுங்கு மக்களுக்கு அவமானமானது. அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகத்தான் பவன் கல்யாண் இருக்கிறார் என தெலுங்கு மக்களும், ரசிகர்களும் நினைத்துக் கொள்வார்கள். அவருடைய பதிவில் குறிப்பிட்டு பவன் கல்யாணை வம்புக்கு இழுத்திருக்கிறார். அதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள். சில மாதங்கள் டுவிட்டரை விட்டு போனவர் மீண்டும் வந்து பெரிய சர்ச்சையை ஆரம்பித்துவிட்டார்.

RamGopalVarma / #RGV / #Rajinikanth / #PawanKalyan

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com