''மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது...எனக்கு மிகவும் குறைவுதான்'' - பவன் கல்யாண்

பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' படம் வருகிற 24-ம் தேதி வெளியாக உள்ளது.
ஐதராபாத்,
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நேற்று "ஹரி ஹர வீர மல்லு" படத்தின் புரமோஷனுக்காக ஊடகங்களுக்கு உரையாற்றினார். கடந்த 2 ஆண்டுகளில், தனது திரைப்படம் தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
நடிகராக இருந்து ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியாக மாறிய அவர், தனது "ஹரி ஹர வீர மல்லு" படத்தை விளம்பரப்படுத்த ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில்,
" அரசியல் ரீதியாக நான் பிரபலமாக இருந்தாலும், ஒரு நடிகராக, எனது புகழும், பாக்ஸ் ஆபீஸ் வசூலும் மற்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்றார்.
கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ''ஹரி ஹர வீர மல்லு''. நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்து இப்படம் வருகிற 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.






