'ஓஜி' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த பவன் கல்யாண்

இயக்குனர் சுஜீத் இயக்கி வரும் 'ஓஜி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஓஜி' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த பவன் கல்யாண்
Published on

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார்.

இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணி நிறைவடையாததால் வெளியாக வில்லை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் 'ஓஜி' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com