பவன் கல்யாணின் “ஓஜி” படத்தின் 2வது பாடல் அப்டேட்

பவன் கல்யாண் நடித்துள்ள 'ஓஜி' படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகிறது.
பவன் கல்யாணின் “ஓஜி” படத்தின் 2வது பாடல் அப்டேட்
Published on

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான 'தே கால் ஹிம் ஓஜி' என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி வைரலானது. இப்படத்தின் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

பவன் கல்யாணின் ஓஜி திரைப்படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ஓஜி படத்தின் 2வது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com