4 வாரங்களில் ரூ.2.52 கோடி... தவறினால் 6 மாதம் சிறை - ரஜினி பட தயாரிப்பாளருக்கு கோர்ட்டு எச்சரிக்கை

காசோலை மோசடி வழக்கில், ‘கோச்சடையான்’ பட தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 வாரங்களில் ரூ.2.52 கோடி... தவறினால் 6 மாதம் சிறை - ரஜினி பட தயாரிப்பாளருக்கு கோர்ட்டு எச்சரிக்கை
Published on

சென்னை,

கோச்சடையான்’ திரைப்படம் வெளியீட்டுக்காக பெறப்பட்ட ரூ.10 கோடி கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், படத்தின் தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை பணமாக்கும்போது திரும்பியதைத் தொடர்ந்து, கடன் வழங்கிய தரப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீடு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

Also Read
சென்னை ஐகோர்ட்டில் தணிக்கை வழக்கை வாபஸ் பெற்ற “ஜனநாயகன்” படக்குழு
4 வாரங்களில் ரூ.2.52 கோடி... தவறினால் 6 மாதம் சிறை - ரஜினி பட தயாரிப்பாளருக்கு கோர்ட்டு எச்சரிக்கை

வழக்கை விசாரித்த கோர்ட்டு, தயாரிப்பாளர் ரூ.2.52 கோடியை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தத் தவறினால், தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com