எனக்கு மன அமைதி முக்கியம் - பிரியா வாரியர்

தனக்கு மன அமைதி முக்கியம் என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
எனக்கு மன அமைதி முக்கியம் - பிரியா வாரியர்
Published on

ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண் அடித்தும் புருவ அசைவுகள் காட்டியும் நடித்த காட்சி மூலம் நாடு முழுவதும் பிரபலமான பிரியா வாரியரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 72 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர். இது பஇந்தி நடிகைகளுக்கு உள்ள எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. 2 வாரங்களுக்கு முன்பு பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகினார். சிலர் அவருக்கு எதிராக ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்கள் பதிவிட்டதால் மன உளைச்சலில் வெளியேறியதாக கூறப்பட்டது. தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது;

நான் சிறிய இடவெளிக்கு பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்துள்ளேன். ஊரடங்கில் எல்லோரும் சமூக வலைத்தளம் பக்கத்தில் இருக்கும் போது நான் எதற்காக இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து விலகி இருந்தேன் என்று பலரும் கேட்கிறார்கள். மன அமைதி என்பது முக்கியம். சமூக வலைத்தளங்கள் என்னை காயப்படுத்தக்கூடாது என்று எதிர்பார்த்தேன். சமீப காலமாக மனதை பாதிக்கும் விஷயங்கள் நடந்தன. கேலியும் செய்தனர். இரண்டு வாரங்களாக மன அமைதியோடு இருந்தேன். சமூக வலைத்தளம் எனது தொழிலுக்கு முக்கியமாக இருப்பதால் மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்துள்ளேன்.

இவ்வாறு பிரியா வாரியர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com