

இந்த படத்தை பார்த்துவிட்டு நான் கதறி அழுதிருக்க வேண்டும். ஒன்று இரண்டு கண்ணீர் துளியோடு என் சோகத்தை நிறுத்திக்கொண்டேன். கடைசி விவசாயி படத்தை ஒரு இஸ்லாமியர் பார்க்க வேண்டும். ஒரு கிறிஸ்தவர் பார்க்க வேண்டும். பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பார்க்க வேண்டும்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள முதியவர், என் கண்களுக்கு ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் போல் தெரிந்தார். படத்தில் பணிபுரிந்த எல்லா கலைஞர்களின் கால்களிலும் விழுந்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது. நானெல்லாம் ஒண்ணுமே இல்லை.