பேரறிவாளனை விடுவிக்க நடிகர்கள் வற்புறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்யும்படி நடிகர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
பேரறிவாளனை விடுவிக்க நடிகர்கள் வற்புறுத்தல்
Published on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்யும்படி நடிகர்கள் வற்புறுத்தி உள்ளனர். நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால் அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோவில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாளின் 29 வருட போராட்டம் குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்கும்படி வேண்டி கேட்கிறது. தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும் என்று பேசி உள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தீர்ப்புக்கு பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்கு மூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com