டாம் குரூஸுடன் 'பெருசு' பட நடிகை - வைரல்


Perusu movie actress with Tom Cruise - viral
x
தினத்தந்தி 17 May 2025 12:25 PM IST (Updated: 17 May 2025 12:44 PM IST)
t-max-icont-min-icon

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்' பட பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சென்னை,

சமூக வலைதள பரபலம் நிஹாரிகா. இவர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்' பட பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது, டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ள நிஹாரிகா,

கனவில் கூட இப்படி நடக்கும் என்று நினைக்க தைரியம் இல்லாத தனக்கு, அதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி என்று நெகிழ்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story