பீனிக்ஸ் படம்: விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ படம் இன்று வெளியாகிறது.
பீனிக்ஸ் படம்: விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யா சேதுபதி
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா சேதுபதி. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், தற்போது கதாநாயகனாக 'பீனிக்ஸ்' என்ற படத்தில் அறிமுகமாகி உள்ளார் . இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாக உள்ளது'

இந்த நிலையில், தான் கதாநாயகனான அறிமுகமாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படம் இன்று வெளியாக உள்ளநிலையில், சூர்யா சேதுபதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com