நடிகர் மம்முட்டியிடம் பினராயி விஜயன் மன்னிப்பு கோரினார்

திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன் மம்முட்டியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் மம்முட்டியிடம் பினராயி விஜயன் மன்னிப்பு கோரினார்
Published on

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வயநாடு நகரியத்துக்கு சென்றார். அப்போது தன்னுடன் நெருங்கி நின்ற வயநாடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ரபீக்கை பார்த்து, "ஏன் பக்கத்தில் நிற்கிறீர்கள்?. நான் ஆளுங்கட்சி சார்பில் வந்ததாக மக்கள் நினைத்து விடுவார்கள்” என்று கூறினார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவாளர்கள் ஆன்லைனில் மம்முட்டியை வசைபாடத் தொடங்கினர்.

இந்நிலையில், இதற்காக மம்முட்டியிடம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மன்னிப்பு கோரியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "மம்முட்டி போன்ற பெரிய நடிகர் அவமதிக்கப்பட்டு இருக்கக்கூடாது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com