திரை இசைத்துறையில் மீண்டும் ஒரு மறைவு... பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமானார். அவருக்கு வயது 75. சேலம் மாவட்டம் வெம்படித்தாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்.கிருஷ்ணராஜ், தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்தவர். 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா', 'தஞ்சாவூர் மண்ணு எடுத்து', ‘கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா’, ‘சோக்கு சுந்தரி’ உள்ளிட்ட பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா கடந்த 17-ந்தேதி காலமானார். அவரது சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சூழலில் பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமான சம்பவம் திரை இசைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com