பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம்..!

பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் மரணம்..!
Published on

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற 'தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை' உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் தனித்துவ குரலால் ரசிகர்களை கவர்ந்து இவரின் பாடல்கள் மூலம் அனைவரையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று(22.05.2022) காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 46.

சங்கீதாவின் திடீர் மறைவால் இசையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com