விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் விநாயகன்

விநாயகன் விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது.
விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் விநாயகன்
Published on

கொச்சி:

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வழக்கம்.

தற்போது விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது.

இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த சக பயணியிடம் மலையாள நடிகர் விநாயகன் அத்துமீறி நடந்து கொண்டார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் ஏறக் காத்திருந்தபோது நடிகர் விநாயகனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் அந்த பயணி கூறி உள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் போது ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதே விமானத்தில் ஏறிய விநாயகன், தன்னை வீடியோ எடுத்தாக குற்றம் சாட்டி தன்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்.

தான் எந்த வீடியோவையும் எடுக்கவில்லை என்றும், விருப்பப்பட்டால் தனது போனை சோத்னை செய்யலாம் என நடிகரிடம் கூறியபோதும், விநாயகன் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக மனுதாரர் கூறி உள்ளார்.

மேலும் விமான நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்றும், பின்னர் ஏர்சேவா போர்டல் மூலம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலரிடம் புகார் அளித்ததாகவும் மனுதாரர் கூறி உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவில் விநாயகனை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com