மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு 75 வது பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து

மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 75 -வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு 75 வது பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அமிதாப்பச்சனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிதாப்பச்சன், உங்களின் சினிமா திறமையைக்கண்டும் பல்வேறு சமூக காரணங்களுக்கு நீங்கள் காட்டிய அக்கறையையும் கண்டு இந்தியா பெருமை அடைகிறது. நீண்ட நாள் நல்ல உடல் நலத்துடன் நீங்கள் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்கிறேன் இவ்வாறு மோடி தெரிவித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com