இறுதிக்கட்டத்தில் 'பாக்கெட் நாவல்' ... இன்னும் 2 வாரங்களில் படப்பிடிப்பு நிறைவு!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்டத்தில் 'பாக்கெட் நாவல்' ... இன்னும் 2 வாரங்களில் படப்பிடிப்பு நிறைவு!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு

தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு, 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பார்வை போஸ்டரில், கதை மற்றும் திரைக்கதைக்கு ஆண்ட்ரூ லூயிஸ் பெயர் இடம்பெற்றிருந்தது. 'லீலை', 'கொலைக்காரன்' திரைப்படங்கள் மற்றும் 'வதந்தி' இணையத் தொடரை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ், இந்தப் படத்தின் கதையையும் திரைக்கதையையும் எழுதியிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com