விஷ சாராய உயிரிழப்பு: 'தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்' - நடிகர் ஜி.வி.பிரகாஷ்
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 40 ஆக உள்ளது. தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியுள்ளது.
சமீபத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ அரசு தெரிவித்தது. இந்த நிலையில், இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது என்று நடிகரும் , இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்
'காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.