

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ். ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து, சாதாரண குடும்ப வாழ்க் கையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றிய படைப்பாளி பாக்யராஜ், 'திரைக்கதை மன்னன்' என்று திரையுலகில் கொண்டாடப்பட்டார்.
இந்த நிலையில், இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். நேற்று அதிகாலை எழுந்து நடைபயிற்சி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த பாக்யராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட, அப்ப டியே மயங்கி சரிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்யராஜின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73.
அதன்பின்னர் பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர் விஜய் மற்றும் நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இயக்குனர் பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர் அவரது உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.
இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு இருக்கின்றனர். நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பெசண்ட் நகர் மின் மயானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.