"என் வாழ்க்கையை மாற்றிய படம் பொல்லாதவன்" - நடிகர் தனுஷ்

'பொல்லாதவன்' திரைப்படம், தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
"என் வாழ்க்கையை மாற்றிய படம் பொல்லாதவன்" - நடிகர் தனுஷ்
Published on

சென்னை,

திரையுலகில் தனக்கு ஏற்பட்ட விமர்சனங்களையும், 'பொல்லாதவன்' திரைப்படம் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றத்தையும் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பொல்லாதவன்'. இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் தனுஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இது குறித்து பேசிய தனுஷ், "எனது திரைப்பயணத்தில் 'பொல்லாதவன்' ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. என்னை ஒல்லியானவர், பலவீனமானவர் என விமர்சித்தவர்களுக்கு மத்தியில், முதன்முறையாக எனது உடலமைப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்த படம் இது" என்றார்.

Also Read
வருவாய் பகிர்வு முறையில் படம் தயாரிப்பு: மே 2-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்
"என் வாழ்க்கையை மாற்றிய படம் பொல்லாதவன்" - நடிகர் தனுஷ்

அக்காலகட்டத்தில் பல விமர்சனங்களை சந்தித்த தனுஷ், இப்படத்திற்காகத் தனது உடலமைப்பை மாற்றி சிக்ஸ் பேக் தோற்றத்தில் திரையில் தோன்றினார். அந்தத் தருணத்தில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாண்ட கைதட்டல்களைத் தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை ஒரு நடிகராகவும், ஆக்சன் நாயகனாகவும் நிலைநிறுத்த உதவிய 'பொல்லாதவன்' திரைப்படம், தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com