``அதற்கு எனக்கு நேரம் இல்லை’’- நடிகர் பொன்னம்பலம்

தன்னைப் பற்றி பலரும் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
``அதற்கு எனக்கு நேரம் இல்லை’’- நடிகர் பொன்னம்பலம்
Published on

சென்னை:

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவில் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம், பின்னர் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

தற்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் வீல் சேரில் இருக்கிறார். சமீபத்தில், வீல் சேரில் இருந்தபடியே அவர் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், தன்னைப் பற்றி பலரும் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

Also Read
சினிமாவில் 25 ஆண்டுகள்…இன்னும் நிறைவேறாத அந்த கனவு - மனம் திறந்த ஸ்ரேயா சரண்
``அதற்கு எனக்கு நேரம் இல்லை’’- நடிகர் பொன்னம்பலம்

நான் வீல் சேரில் இருப்பதை பார்த்தவுடன், என்னைப் பற்றி நேரில் பார்த்தது போல பலரும் பல கதைகள் கூறுகிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் மது அருந்துவேன் என சொல்கிறார்கள். அப்படி கூறுபவர்கள் ஆதாரத்துடன் பேசினால் நான் ஏற்றுக்கொள்வேன். சிலர் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள். வெளியே பேசப்படும் கதைகளை கேட்க எனக்கு நேரமில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com