'பொன்னியின் செல்வன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்
Published on

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.470 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com