பொன்னியின் செல்வன் -2 நடிகர் கார்த்தியை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்.. உடைந்த திரையரங்கு கண்ணாடி

முதல் காட்சியான காலை 9 மணி காட்சியை பொன்னியின் செல்வன் -2 படக்குழு ரசிகர்களுடன் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தனர்.
பொன்னியின் செல்வன் -2 நடிகர் கார்த்தியை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்.. உடைந்த திரையரங்கு கண்ணாடி
Published on

சென்னை

விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

முதல் காட்சியான காலை 9 மணி காட்சியை பொன்னியின் செல்வன் -2 படக்குழு ரசிகர்களுடன் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தனர்.

நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

காசி திரையரங்கிற்கு இப்படம் பார்க்க நடிகர் கார்த்தி வந்திருந்தார். படம் முடிந்து வெளிவரும் போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வந்ததால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து ரசிகர் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக உடைந்த திரையரங்கின் கண்ணாடி சரி செய்து தரப்படும் என்று காசி திரையரங்க நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com