சமந்தா, தமன்னாவின் பாதையில் பூஜா ஹெக்டே?


Pooja Hedge on Samantha & Tamannaah’s Route
x

அஜய் ஞானமுத்து இயக்கும் வெப் தொடரில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

ஜான்வி கபூர், தமன்னா மற்றும் சமந்தா உள்பட பல நடிகைகள் தற்போது வெப் தொடர்களில் நடிக்கின்றனர். இவ்வாறு ஓடிடி-ல் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டு தற்போது பூஜா ஹெக்டேவும் அந்த பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.

அதன்படி, 'டிமான்ட்டி காலனி' மற்றும் 'கோப்ரா' படங்களுக்கு பெயர் பெற்ற அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக கூறப்படும் ஒரு வெப் தொடரில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரன்வீர் சிங்குடன் 'சர்க்கஸ்', சல்மான் கானுடன் 'கிசி கா பாய் கிசி கி ஜான்', பிரபாஸுடன் 'ராதே ஷியாம் 'மற்றும் ஷாஹித் கபூருடன் 'தேவா' போன்ற சமீபத்தில் வெளியான பூஜா ஹெக்டே படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story