விஜய் முதல்வர் ஆவதை..அன்றே கணித்த பூஜா ஹெக்டே! விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்..வைரல் வீடியோ

2026ல் முதலமைச்சர் ஆவப்போவது விஜய்தான் என்று நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.
விஜய் முதல்வர் ஆவதை..அன்றே கணித்த பூஜா ஹெக்டே! விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்..வைரல் வீடியோ
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் கடைசியாக நடித்திருக்கும் படம், ‘ஜனநாயகன்’. தமிழக அரசியல் கட்சியை தொடங்கியதற்கு பிறகு, தான் இனி சினிமாவிற்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார். இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்த பின்னர், முழு நேரமாக கட்சி பணிகளில் இறங்கினார்.

‘ஜனநாயகன்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இதற்கு முன்னரும் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி, தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கிறது. விஜய், முதலமைச்சர் எனும் இடத்திற்கு வரும் நாள், நெருங்கி விட்டது. இதையடுத்து, விஜய்க்கு ஆதரவாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பல சினிமா பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் முதல்வராக உள்ளதை அடுத்து நடிகை பூஜா ஹெக்டே வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ, ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என தெரிகிறது. அதில், ஒரு வெள்ளை போர்டில், “Who Will win the Election?” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை ஹைலைட் செய்து காண்பித்துள்ள பூஜா ஹெக்டே, அதற்கு அடுத்த பிரேமில் தனக்கு பின்னால் இருக்கும் விஜய்யை காண்பிக்கிறார். அப்போது விஜய் முகத்தை மூடி, சிரிக்கிறார். பின்னர், பூஜாவும் விஜய்யும் சிரிக்கும் பிரேமோடு அந்த வீடியோ முடிகிறது. இதில், 2026ல் முதலமைச்சர் ஆவப்போவது விஜய்தான் என்று அவர் முன்கூட்டியே கணித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

“விஜய் முதல்வர் ஆவதை முன்பே சரியாகக் கணித்துவிட்டேன்; கனவுகள் நனவாகியிருப்பதற்கு வாழ்த்துகள், விஜய் சார்!..” என பதிவிட்டு ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தை வீடியோவாக பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com