பூஜா ஹெக்டேவின் 'ரெட்ரோ' கிளிக்ஸ் - வைரல்


Pooja Hegdes retro clicks - viral
x
தினத்தந்தி 2 May 2025 7:54 AM IST (Updated: 9 Jun 2025 11:47 AM IST)
t-max-icont-min-icon

நேற்று திரையரங்குகளில் வெளியான 'ரெட்ரோ' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சென்னை,

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர் சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தில் ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பூஜா பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

1 More update

Next Story