''ரெட்ரோ''வுக்கு பிறகு பூஜா ஹெக்டே நடித்து வரும் படங்கள்

இந்த ஆண்டு அதிர்ஷ்டம் பூஜா ஹெக்டேவுக்கு சாதகமாக அமைந்ததால், பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கிறது.
சென்னை,
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ''டிஜே'' படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே பிரபலமாகி இருந்தாலும், பின்னர் தொடர்ச்சியான தோல்வி படங்களை கொடுத்து பின்னடைவை சந்தித்தார். இதன் விளைவாக 2023-ம் ஆண்டு அவரது நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது.
அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு எந்த படமும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக அமைந்ததால், பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கிறது.
அதன்படி, ஷாஹித் கபூருக்கு ஜோடியாக "தேவா", சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான "ரெட்ரோ", விஜய்யுடன் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 'ஜனநாயகன்' , ரஜினிகாந்த் நடித்துள்ள ''கூலி'' படத்தில் ஒரு சிறப்பு பாடலிலும் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
மேலும், வருண் தவானுடன் இணைந்து "ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை" படத்திலும் நடித்து வருகிறார். பல பாலிவுட் திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார்.