வெப் தொடரில் ஆபாசமாக நடித்த பூஜாகுமார்

நடிகை பூஜாகுமார் வெப் தொடரில் ஆபாசமாக நடித்துள்ளார்.
வெப் தொடரில் ஆபாசமாக நடித்த பூஜாகுமார்
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கில் வெப் தொடர்கள் அதிகம் தயாராகின்றன. இவற்றுக்கு தணிக்கை இல்லை என்பதால் படுக்கை அறை ஆபாச காட்சிகளை தாராளமாக காட்டுகிறார்கள். இளைஞர்களை குறிவைத்தே வெப் தொடர்களை எடுக்கின்றனர்.

இந்தியில் தயாரான பல வெப் தொடர்களில் நிர்வாண காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் நடிகை பூஜாகுமாரும் வெப் தொடரில் ஆபாசமாக நடித்து இருக்கிறார். காதல் ரோஜாவே படம் மூலம் அறிமுகமான இவர் கமல்ஹாசன் ஜோடியாக விஸ்வரூபம் படத்தில் நடித்து பிரபலமானார். உத்தம வில்லன், மீன் குழம்பும் மண்பானையும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் பிரியதர்ஷன், மகேஷ் மஞ்ச்ரேகர், அனிருத் ராய் சவுத்ரி, பிரதீப் சர்கார் ஆகிய 4 பிரபல டைரக்டர்கள் இயக்கி உள்ள போர்பிடன் லவ் என்ற வெப் தொடரில் கணவனுக்கு துரோகம் செய்து குறைந்த வயது இளைஞருடன் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணாக ஆபாசமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இளைஞருக்கு முத்தம் கொடுத்து படுக்கை அறை காட்சிகளில் நெருக்கம் காட்டி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com