பூனம் பாஜ்வா உடல் எடையை குறைத்தார்

தமிழ் பட உலகின் இளம் கதாநாயகிகளில் ஒருவர், பூனம் பாஜ்வா.
பூனம் பாஜ்வா உடல் எடையை குறைத்தார்
Published on

தமிழ் பட உலகின் இளம் கதாநாயகிகளில் ஒருவர், பூனம் பாஜ்வா. மும்பை அழகி. இவர் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, துரோகி, ஆம்பள, அரண்மனை-2 ஆகிய படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் படங்களில் நடித்திருப்பது போல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

4 மொழி ரசிகர்களுக்கும் அறிமுகமான நாயகியாக இருப்பதால், அந்த மகிழ்ச்சியில் இவர் குண்டாகி விட்டார்.

இப்படி இருந்தால் எப்படி கதாநாயகியாக நடிக்க முடியும்? அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைக்கும் என்று அவருக்கு நெருக்கமான சினேகிதர்கள் அறிவுரை கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து பூனம் பாஜ்வா தன் உடல் எடையை குறைத்து விட்டார். இப்போது அவர், பூனம் பாஜ்வாவுக்கு தங்கை போல் காணப்படுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com