ஸ்ரீரெட்டி பாணியில் நடிகை பூனம் கவுர் பரபரப்பு புகார் தனது மோசமான அனுபவங்களை விவரிக்கிறார்

நடிகை ஸ்ரீரெட்டி பாணியில் நடிகை பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். #PoonamKaur #SriReddy
ஸ்ரீரெட்டி பாணியில் நடிகை பூனம் கவுர் பரபரப்பு புகார் தனது மோசமான அனுபவங்களை விவரிக்கிறார்
Published on

ஐதராபாத்

தமிழில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்த பூனம் கவுர், பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு ஸ்வரர்னா காட்கம் என்ற சிரீயலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்தும் பேசினார். அப்போது சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் கூறியுள்ளார்.

தயாரிப்பாளரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பூனம் கவுர், முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்தார் என்றும், தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய பூனம் கவுர், அந்த தயாரிப்பாளர் தனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com