கருக்கலைப்பு தீர்ப்புக்கு பூனம் கவுர் வரவேற்பு

திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்று உள்ளார்.
கருக்கலைப்பு தீர்ப்புக்கு பூனம் கவுர் வரவேற்பு
Published on

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூனம் கவுர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்று உள்ளார். இதுகுறித்து பூனம் கவுர் கூறும்போது, ''சட்டப்படியான பாதுகாப்பான கருக்கலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் கூட தகுதியானவர்கள்தான். திருமணமாகாத பெண்களுக்கும், கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது. பெண்கள் கருத்தரித்த பிறகு ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என பலவந்தப்படுத்துவதை நான் நிறைய இடங்களில் பார்த்தேன். இந்த நிலையில் கருக்கலைப்பு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை ஆதரிக்கிறேன். பொருளாதார ரீதியாக தன்னை காத்துக்கொள்ளவும், திருமண உறவை காப்பாற்றிக்கொள்ளவும் பெண்கள் கருத்தரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அப்படி செய்வதால் வாழ்க்கை முழுவதும் வேதனைப்பட வேண்டியது இருக்கும். பெண்கள் குழந்தை பெறுவதை சுய நலத்துக்கு பயன்படுத்தக்கூடாது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com