'புறநானூறு' படம் : சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் நிவின் பாலி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 'புறநானூறு' படம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது.
'புறநானூறு' படம் : சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் நிவின் பாலி
Published on

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். இவரது நடிப்பில் பெரியசாமி ராஜ்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'அமரன்'. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் 'புறநானூறு' திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணத்தால் இதில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்த கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com