பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து பிரபல நடிகை திடீர் விலகல்


Popular actress abruptly leaves Prabhu Devas dance show
x

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னை,

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திரைத்துறையில் பணிபுரிந்து வருபவர் பிரபு தேவா. இவரின் நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சி நடத்துவதுண்டு. அந்தவகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரபு தேவாவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பாகுபாட்டின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இதற்கும் பிரபுதேவாவிற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரபுதேவாவின் மிகப்பெரிய ரசிகையாக நான் எப்போதும் இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story