ரஜினியின் “தர்மன்” படத்தில் இணைந்த பிரபல நடிகை

அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ரஜினியின் “தர்மன்” படத்தில் இணைந்த பிரபல நடிகை
Published on: 

ரஜினியின் “தர்மன்” படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

மருத்துவராக ரஜினிகாந்த்

இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சமீபத்தில் அறிவித்திருந்தார்.

படத்தில் இணைந்த நயன்தாரா

இந்நிலையில், ரஜினியின் “தர்மன்” படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாராவின் கிளிம்பிஸ் வீடியோ இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

ரஜினியுடன் நயன்தாரா நடித்துள்ள படங்கள்

நயன்தாரா ரஜினிகாந்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்தே ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com