குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்குவதே இலக்கு - பிரபல நடிகரின் தந்தை


குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்குவதே இலக்கு - பிரபல நடிகரின் தந்தை
x

மக்கள் விரும்பும் நடிகராக மிளிர வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் கதிரின் தந்தை லோகு கூறியுள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான `மாஸ்டர்' படத்தில் இடம்பெற்று நடிகராக அறிமுகமானவர், லோகு. சமீபத்தில் வெளியான `பேரன்பும் பெருங்கோபமும்', `படை தலைவன்' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.

விரைவில் ரிலீசாக உள்ள `தீயவர் குலை நடுங்க', `ஆர்யன்' உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்குவதே இலக்கு என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''சினிமா மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம். இங்கு திறமையில்லாமல் சாதிக்கவோ, அடையாளம் பெறவோ முடியாது. என்னை பொறுத்தவரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்க்க விரும்புகிறேன். மக்கள் விரும்பும் நடிகராக மிளிர வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காக எந்த அர்ப்பணிப்பை வழங்கவும் தயாராக இருக்கிறேன்''. என்றார்.

`மதயானைக்கூட்டம்', `பரியேறும் பெருமாள்', `விக்ரம் வேதா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கதிரின் தந்தை தான் லோகு என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story