100-வது படத்தோடு ஓய்வு பெற விரும்பும் பிரபல இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி

தற்போது பிரியதர்ஷன் ''ஹைவன்'' படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை,
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஓய்வுத் திட்டத்தை பற்றி தெரிவித்திருக்கிறார். 100 படங்களை எட்டியதும் திரையுலகிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புவதாக அவர் கூறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது பிரியதர்ஷன் ''ஹைவன்'' படத்தை இயக்கி வருகிறார். இதில் சைப் அலி கான் மற்றும் அக்சய் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசுகையில், '' நான் தற்போது ஹைவன் படத்தை இயக்கி வருகிறேன். இதில், மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பார். அவரது வேடம் நிச்சயமாக பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். எனது 100வது படம் முடிந்ததும் ஓய்வு பெற விரும்புகிறேன். நான் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருக்கிறேன்'' என்றார்.
மோகன்லால் நடித்த பூச்சக்கொரு மூக்குத்தி (1984) படத்தின் மூலம் பிரியதர்ஷன் இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன்பு, மோகன்லால் நடித்த திரனோட்டம் (1978) படத்தில் இயக்குனர் வி. அசோக் குமாரிடம் உதவியாளராக பிரியதர்ஷன் பணியாற்றினார். பிரியதர்ஷன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புகிறார்.






